30 நாட்களுக்குள் பில் கட்டணும் : தவறினால் மின்சாரம் துண்டிப்பு
30 நாட்களுக்குள் பில் கட்டணும் : தவறினால் மின்சாரம் துண்டிப்பு
ADDED : ஆக 30, 2024 11:47 PM
பெங்களூரு:
'மின்சார பில் வந்த 30 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்ற புதிய நடைமுறை, நாளை முதல் அமலாகிறது.
பெஸ்காம் தரப்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய சிபாரிசு படி, செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. வீடு, வணிகம், அடுக்குமாடி குடியிருப்பு, தற்காலிக மின் இணைப்பு கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், பில் வழங்கிய, 30 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
தவறினால் அத்தகையோரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே அனைத்து வாடிக்கையாளர்களும் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துங்கள்.
பில் வழங்கிய 15 நாட்களுக்குள், வட்டியில்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம்.
அதன் பின், வட்டியுடன் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும், கூடுதல் உத்தரவாத பிடிப்பு தொகை செலுத்த தவறினாலே, பாக்கி தொகை 100 ரூபாயை மீறினாலும், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.