பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி ஆளும் கட்சியினர் கடுப்பு
பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி ஆளும் கட்சியினர் கடுப்பு
ADDED : ஜூலை 25, 2024 11:01 PM
பெங்களூரு: 'பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சியை, வரும் நாட்களில் மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்' என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நாராயணசாமி, சிவலிங்கே கவுடா, நரேந்திரசாமி ஆகியோர் பெங்களூரில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையாவின் மரியாதையை அழிக்கும் நோக்கில் பா.ஜ.,வினர் செயல்படுகின்றனர். அரசியல் ரீதியாக அவரை சிக்க வைக்க நினைக்கும் பா.ஜ.,வினர் எண்ணம் நிறைவேறாது. அவர்களின் உள்ளிருப்பு போராட்டம் எத்தனை நாட்களுக்கு என்பதை பார்ப்போம்.
பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சியை, வரும் நாட்களில் மக்கள் முன் அம்பலப்படுத்துவோம். மூடா நிலம் ஒதுக்கீடு தொடர்பான பழைய ஊழலை பா.ஜ., வேண்டுமென்றே எழுப்பி உள்ளது. இது குறித்து விவாதிக்க அவகாசம் கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஊழலில் முதல்வருக்கு தொடர்பில்லை. ஒதுக்கியதில் அவரின் கையெழுத்தும் இல்லை. இது பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல். மைசூருக்கு பா.ஜ., பாதயாத்திரை செல்வதன் நோக்கம் என்ன. இந்த மோசடி குறித்து ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

