பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் காங்.,கிற்கு ஆதரவு
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் காங்.,கிற்கு ஆதரவு
ADDED : ஏப் 09, 2024 10:21 PM

ஹாசன் : ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுடன், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாஆதரவாளர்கள் கைகோர்த்து உள்ளனர்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கும் ம.ஜ.த.,வுக்கு, ஹாசன் தொகுதியை ஒதுக்க, ஹாசன் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா முதலில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
ஆனாலும் ம.ஜ.த.,வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரீத்தம் கவுடா மறுக்கிறார்.
இந்நிலையில், பிரீத்தம் கவுடாவின் நெருங்கிய ஆதரவாளரான, உத்துார் புருஷோத்தம் கவுடா என்பவர், ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுடன் கைகோர்த்துஉள்ளார்.
ஹாசனில் ஸ்ரேயஷ் படேல் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தபோது, அவரை உத்துார் புருஷோத்தம் கவுடா சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் ம.ஜ.த., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பிரீத்தம் கவுடா கூறுகையில், ''காங்கிரஸ் தொண்டர்களை, பா.ஜ.,வுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறேன். ஆனால் நானே எனது ஆதரவாளர்களை, காங்கிரசுக்கு அனுப்பி வைப்பேனா? உத்துார் புருஷோத்தம் கவுடா, ஸ்ரேயஷ் படேலுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்று தெரியவில்லை,'' என்றார்.

