ADDED : ஜூன் 29, 2024 11:01 PM

பல்லாரி: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பல்லாரி நகரில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில், அரசின் பங்களிப்பு இருப்பதால், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர்.
பல்லாரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தலைமையில், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு அங்கேயே கழித்தனர். நேற்று காலை அங்கு வந்த போலீசார், பா.ஜ.,வினரை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள், காங்கிரஸ் மற்றும் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.