ADDED : ஏப் 18, 2024 04:34 AM

பெங்களூரு, : உத்தரகன்னடா லோக்சபா தொகுதியில் அஞ்சலி நிம்பால்கர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின்போது, 'பெலகாவி மாவட்டத்தின், சில தாலுகாக்கள் மஹாராஷ்டிராவில் சேர வேண்டும்' என கூறினார்.
இதனால் கன்னட அமைப்பினரும், பா.ஜ., வினரும் கொதிப்படைந்துள்ளனர். அஞ்சலி நிம்பால்கரை கண்டித்தனர்.
இதுகுறித்து, பா.ஜ., தேர்தல் நிர்வகிப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுனில்குமார், நேற்று கூறியதாவது:
மாநிலத்தை பிரிப்பது, காங்கிரசின் ரகசிய நடவடிக்கையா என்பதை, முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்த வேண்டும். அஞ்சலி நிம்பால்கர் மாநிலத்தின் நலனுக்கு எதிராக பேசியும், தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்?
விதான் சவுதாவில் காங்கிரஸ் தொண்டர்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, கோஷமிட்டபோதும், முதல்வர் சித்தராமையா மவுனமாக இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

