ஜனாதிபதி ஆட்சியை திணிக்க பா.ஜ., முயற்சி: சிவகுமார்
ஜனாதிபதி ஆட்சியை திணிக்க பா.ஜ., முயற்சி: சிவகுமார்
ADDED : ஏப் 20, 2024 04:52 AM

பெங்களூரு ''கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. பா.ஜ.,வினர் தேவையின்றி குற்றம் சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. இங்கு ஜனாதிபதி ஆட்சியை திணிக்க, பா.ஜ.,வினர் நாடகமாடுகின்றனர். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர, நாங்கள் விட மாட்டோம்.
சட்ட விரோதமாக செயல்படுவோர் மீது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கிறோம். கர்நாடகா மற்றொரு பீஹார் ஆவதாக, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டுகிறார். அவரது ஆட்சியிலும் கொலைகள் நடந்தன. அனைவரின் ஆட்சியிலும் சொந்த பகைக்காக கொலைகள் நடக்கின்றன. அதற்காக சட்டம் - ஒழுங்கு பாழானதாக கூறுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

