அரசியலமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.,: பிரசாரத்தில் அகிலேஷ் பேச்சு
அரசியலமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.,: பிரசாரத்தில் அகிலேஷ் பேச்சு
ADDED : மே 02, 2024 03:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக பா.ஜ., செயல்பட்டது. விவசாயிகளின் கடனை பா.ஜ., தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் தொழில் அதிபர்களின் கடனை அவர்கள் தள்ளுபடி செய்தனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்.
பா.ஜ., ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்கும், நம் வாழ்வுக்கும் பா.ஜ., அச்சுறுத்தலாக இருப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

