ADDED : ஜூலை 01, 2024 09:13 PM

பெங்களூரு : கர்நாடக பா.ஜ., செயற்குழு கூட்டம், வரும் 4ம் தேதி நடக்கவுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து, பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் கூறியதாவது:
கர்நாடக பா.ஜ., செயற்குழு கூட்டம், வரும் 4ல் நடக்கவுள்ளது. பெங்களூரு, அரண்மனை மைதானத்தின், ஒயிட் பெட்டல்ஸ் ஹாலில் செயற்குழு கூட்டம் நடக்கும். இதில் கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட, பல முக்கிய தலைவர்கள் பங்கேற்பர்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, செயற்குழு கூட்டத்தை துவக்கி வைப்பார். இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, பாராட்டு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.