'ரோந்து செல்லும் போலீசாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை': அண்ணாமலை
'ரோந்து செல்லும் போலீசாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை': அண்ணாமலை
ADDED : ஆக 08, 2025 01:39 AM

பொள்ளாச்சி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
உடுமலை அருகே சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது போன்று இனி ஒரு உயிர் போகக்கூடாது.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அளவில் போலீசார் ரோந்து செல்கின்றனர். கஞ்சா, குடி போதையில் வருவோர் என்ன செய்கிறோம் என தெரியாத அளவுக்கு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
மூன்றாண்டுகளில் காவலர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, 'ஜீரோ வேக்கன்சி' நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இரவு ரோந்து போலீசார் தனியாக செல்லாமல், இரண்டு பேருடன் செல்ல வேண்டும். நவீன உபகரணங்கள், நல்ல நிலையில் வேகமாக செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள், உடையில் கேமரா உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
புதிய காவல் நிலையங்களை உருவாக்கி, போலீசாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். சட்டம் -- ஒழுங்கு சரியில்லை என விமர்சிப்பவர்கள், போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குற்றங்களுக்கு காரணமான மது, போதை பழக்கங்களை இரும்புக் கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.