ADDED : ஏப் 13, 2024 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: 'பா.ஜ.,வின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. மேற்கு வங்க மாநிலத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்?.
பா.ஜ.,வின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் கூறப்படும் பொய் வாக்குறுதிகள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை பா.ஜ., அழித்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ, தலைவர்கள் கூறி வருகின்றனர்.

