காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் பா.ஜ.,வின் இரு கண்கள்: மம்தா சாடல்
காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் பா.ஜ.,வின் இரு கண்கள்: மம்தா சாடல்
ADDED : ஏப் 28, 2024 05:52 PM

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் இரு கண்களாக காங்கிரசும், மா.கம்யூ.,ம் இருக்கின்றன' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை.
மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும். காங்கிரஸ் அல்லது மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
நடனம் ஆடிய மம்தா!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மால்டா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலைஞர்களுடன் நடனமாடினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. துர்காபுரில், நேற்று (ஏப்ரல் 27) படிக்கட்டுகளில் ஏறி ஹெலிகாப்டருக்குள் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

