ADDED : மே 10, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹலசூரு : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், பி.எம்.ஆங்கில பள்ளியில், 99.9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பெங்களூரு ஹலசூரு செயின்ட் ஜான்ஸ் சாலை சிவன்ஷெட்டி கார்டனில், பி.எம். ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதே போன்று, இந்தாண்டு 99.9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி தலைவர் கே.எஸ்.வி.சுப்பிரமணியம், நிர்வாக இயக்குனர் எஸ்.ராஜேஷ், முதல்வர் பி.ஷாமலா, நிர்வாக அதிகாரி கிரிஜா ராஜேஷ், ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.