ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பி.எம்.டி.சி., சிறப்பு பஸ்கள்
ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பி.எம்.டி.சி., சிறப்பு பஸ்கள்
ADDED : மே 03, 2024 07:10 AM
பெங்களூரு: 'ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் மூன்று நாட்களுக்கு, பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு 1:00 மணி வரை, பி.எம்.டி.சி., சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், வரும் 4, 12, 18 ஆகிய நாட்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டி முடிவதற்கு இரவு 11:30 மணியை தாண்டும். எனவே போட்டிகள் நடக்கும் நாட்களில், நள்ளிரவு 1:00 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானம் பகுதியில் இருந்து, எந்தெந்த பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பி.எம்.டி.சி., அறிவித்துள்ளது.
எஸ்.பி.எஸ்., - 1கே பஸ், எச்.ஏ.எல்., மார்க்கமாக காடுகோடி பஸ் நிலையம்; ஜி - 2 பஸ், அகரா மார்க்கமாக சர்ஜாபுரா; ஜி - 3 பஸ், ஓசூர் சாலை மார்க்கமாக எலக்ட்ரானிக் சிட்டி; ஜி - 4 பஸ், பன்னரகட்டா தேசிய பூங்கா. ஜி - 6 பஸ், நாயண்டஹள்ளி மார்க்கமாக கெங்கேரி கே.எச்.பி., குடியிருப்பு; ஜி - 7 பஸ், மாகடி சாலை மார்க்கமாக ஜனபிரியா டவுன்ஷிப்; ஜி - 9 பஸ், எலஹங்கா 5வது ஸ்டேஜ்.
ஜி - 10 பஸ், நாகவரா மார்க்கமாக ஆர்.கே.ஹெக்டே நகரா; ஜி - 11 பஸ், ஹென்னுார் மார்க்கமாக பாகலுார்; 317 ஜி பஸ், ஹொஸ்கோட் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.