ADDED : செப் 07, 2024 07:31 AM

தென் மாநில உணவுகளில் மிகவும் பிரபலமான, சுவையான 'ரெசிபி' ரசம். தென் மாநில மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது, புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் துாள் மற்றும் பிற மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. புளிப்பு சுவையுடன் இருக்கும் ரசத்தை, சூப் போன்று ஒரு கிண்ணத்திலோ, டம்ளரிலோ அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சுவையான ரெசிபி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்.
செய்முறை
தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளியுங்கள்.
பிறகு தக்காளி, இஞ்சி துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி பருப்பு தண்ணீரை சேருங்கள். நுரைகட்டி வரும் போது கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து இறக்குங்கள், கொதிக்க விடக்கூடாது.
உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.
தேவையான பொருட்கள்
l பிஞ்சு இஞ்சி -- 25 கிராம்
l பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 டம்ளர்
l பச்சை மிளகாய் - 1
l மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன்
l மல்லி இலை, கறிவேப்பிலை
l சர்க்கரை - ஒரு சிட்டிகை
l எலுமிச்சை சாறு - அரை பழம்
l உப்பு - தேவையான அளவு
தாளிக்க
l நெய் - 2 டீஸ்பூன்
l கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
l பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்
l பெருங்காயம் - கால் டீஸ்பூன்
l தக்காளி - 1
எலுமிச்சை இஞ்சி ரசம்
. - நமது நிருபர் -