ADDED : செப் 10, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல், 33, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை, கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரஜ்வல் தரப்பில் மூத்த வக்கீல் பிரபுலிங்க நாவடகியும், சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், சிறப்பு அரசு வக்கீல் ரவிவர்மா குமாரும் வாதாடினர். பின், விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு சார்பில், 1,632 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.