வந்தே மாதரம் 150வது ஆண்டு விழாவை கொண்டாட அழைப்பு!: மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பிரதமர் வேண்டுகோள்
வந்தே மாதரம் 150வது ஆண்டு விழாவை கொண்டாட அழைப்பு!: மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பிரதமர் வேண்டுகோள்
ADDED : அக் 26, 2025 11:42 PM

புதுடில்லி: ''வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த பாரதம், அதில் இருந்து மீண்டு புத்தெழுச்சி பெறுவதற்காக இயற்றப்பட்ட இப்பாடலை வருங்கால சந்ததியினருக்கும் கடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று ஒலிபரப்பான, 127வது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது:
வரும் நவ., 7 ம் தேதி அன்று வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு உற்சவத்திற்குள் நுழையப் போகிறோம். 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்த தேச பக்தி பாடல், இன்றும் நம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பும் வகையில் இருக்கிறது.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இயற்றிய, இப்பாடலை முதன் முதலாக 1896ல் ரவீந்திரநாத் தாகூர் பாடினார்.
சமஸ்கிருதம் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உற்சவத்தையொட்டி, இனி வரும் நாட்களில் நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். அதை நாட்டு மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட வேண்டும்.
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிகழ்ச்சிகள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.
வந்தே மாதரம் பாடலின் சிறப்புகளை எதிர்கால சந்ததியினருக்கு நாம் கடத்திச் செல்ல வேண்டும்.
சமஸ்கிருதம் என்று சொன்னதும் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், பண்டைய காலத்தின் மெய்ஞானம், தத்துவஞானம் ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும்.
ஒரு காலத்தில் வழக்கு மொழியாக இருந்த சமஸ்கிருதம், சுதந்திரத்திற்கு பின் துரதிர்ஷ்டவசமாக புறக்கணிப்புக்கு உள்ளானது. அந்த மொழியின் மீதான ஈடுபாடு குறைந்து கொண்டே சென்றது.
ஆனால், தற்போது கா லம் மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதம் புத்துயிர் பெற்று வருகிறது.
பல இளைஞர்கள் சமஸ்கிருத மொழியில் சுவாரஸ்யமான 'ரீல்ஸ்'களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கிரிக்கெட் வீரரான யஷ் சாலுங்கே என்ற இளைஞர் சமஸ்கிருதத்தில் உரையாடிக் கொண்டே கிரிக்கெட் விளையாடும் 'ரீல்ஸ்'களை வெளியிட்டு வருகிறார். இது மக்களிடை யே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல் கமலா, ஜான்வி ஆகிய இரு சகோதரிகளின் பணியும் மிகவும் சிறப்பானது. ஆன்மிகம், தத்துவஞானம், சங்கீதம் ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தை அவர்கள் உருவாக்குகின்றனர்.
தனிப்பிரிவு இன்ஸ்டாகிராமில் 'சம்ஸ்கிருத சாத்ரோஹம்' என்ற பெயரில் இளைஞர்களுக்கான ஒரு சேனலும் இயங்கி வருகிறது.
நம் துணை ராணுவப் படையில் தற்போது நாட்டு நாய்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை போன்ற துணை ராணுவப் படைகளில் இந்திய ரக நாய்களுக்கு என தனிப் பிரிவு துவங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் நாட்டின் முத்தோல் ஹவுண்ட்ஸ் இன நாய்கள் போட்டிகளில் பங்கேற்று, அயல் நாட்டு நாய்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன.
வரும் நவ., 15ம் தேதி, பழங்குடியினத் தலைவரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி, ஜனஜாதீய கவுரவ் திவஸ் கொண்டாடப்படவுள்ளது.
இந்நாளில் பழங்குடியின மக்களின் நலனுக்காக பாடுபட்ட பகவான் பிர்சா முண்டாவையும், ஹைதராபாத் நிஜாமை எதிர்த்து வீர தீரத்துடன் சண்டையிட்ட கோமரம் பீமையும் நாம் நினைவு கூர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் பில்டர் காபியா
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் இந்திய காபி ரகங்கள் புகழடைந்து வருகின்றன. தமிழகத்தி ன் நீலகிரி, ஆனைமலை, ஏற்காடு சேர்வராயன், கொடைக்கானல் புல்னே ஆகட்டும், கர்நாடகத்தின் கூர்க், ஹாசன், சிக்மகளூரு ஆகட்டும், இல்லையெனில் கர்நாடக - தமிழக எல்லையோர நீலகிரி மலையில் உற்பத்தியாகும் காபி ஆகட்டும் சர்வதேச அ ளவில் தனி இடம் கிடைத்து வருகிறது. கேரளாவின் வயநாடு, திருவிதாங்கூர், மலபார் பகுதிகளில் விளையும் காபிகளுக்கும் தனி மவுசு கிடைத்து வருகிறது. ஒடிசாவின் கொரபுட் காபியும் மெல்ல பிரபலமடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

