வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள்: அமெரிக்க தமிழர்கள் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!
வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள்: அமெரிக்க தமிழர்கள் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!
ADDED : செப் 02, 2024 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'அமெரிக்காவில் வாஞ்சையோடு என்னை உறவுகள் அணைத்து கொள்கிறது' என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க தமிழர்கள் வரவேற்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர், 'அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!
தங்களது உழைப்பாலும், அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்' என தெரிவித்துள்ளார்.