sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபைக்கு இடைத்தேர்தல்: சி.சி.பாட்டீல் ஆருடம்

/

சட்டசபைக்கு இடைத்தேர்தல்: சி.சி.பாட்டீல் ஆருடம்

சட்டசபைக்கு இடைத்தேர்தல்: சி.சி.பாட்டீல் ஆருடம்

சட்டசபைக்கு இடைத்தேர்தல்: சி.சி.பாட்டீல் ஆருடம்


ADDED : மே 06, 2024 05:15 AM

Google News

ADDED : மே 06, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதக் : ''லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் இரண்டாக உடையும். கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்கும்,'' என, பா.ஐ.,வின் முன்னாள் அமைச்சர் சி.சி,பாட்டீல் தெரிவித்தார்.

கதக்கில் நேற்று அவர் கூறியதாவது:

கோவிஷீல்டு தடுப்பூசியால், பின் விளைவுகள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்ததாக, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இயலாமையில் உள்ள காங்கிரஸ், இறுதி அஸ்திரமாக அவப்பிரசாரம் செய்கிறது. நான், கோவிஷீல்டு தடுப்பூசி 'மூன்று டோஸ்' போட்டுக் கொண்டேன்.

பிரியங்காவும் கூட, கொரோனா தடுப்பூசி போட்டிருக்க கூடும். கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பு நடந்திருந்தால், ஊடகத்தினர் மவுனமாக இருந்திருப்பரா?

ஏழைகளுக்கு இலவச திட்டங்களை கொண்டு வந்ததில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை, முதல்வர் சித்தராமையா ஆய்வு செய்திருக்க வேண்டும். பசவராஜ் பொம்மையின் முதல்வர் பதவி காலம் முடிந்த போது, அரசு கருவூலத்தில் 25,000 கோடி ரூபாய் இருந்தது.

இதை காலியாக்கிய சித்தராமையா கடன் வாங்கியுள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் உள்ளது. ஆனால் 10 பஸ்கள் ஓட வேண்டிய இடத்தில், நான்கு பஸ்கள் ஓடுகின்றன. பழுதடைந்த பஸ்களை, சரி செய்யவும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் பணம் இல்லை.

எம்.எல்.ஏ.,க்களுக்கு சரியாக ஊதியம் கிடைக்கவில்லை.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் கிடைக்கிறது. மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலை குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடக காங்கிரஸ் இரண்டாக உடையும். காங்கிரஸ் இல்லாத நாடு உருவாகும். தோல்வி பொறுப்பை ஏற்று, சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை உருவாகும். இதனால் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடக்கலாம். தேர்தலை எதிர்க்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில், உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் என, குமாரசாமி கூறியுள்ளார்.

சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல. அவர் தவறு செய்திருந்தால், தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இத்தகைய சம்பவம் நடந்திருக்க கூடாது. விசாரணை முடிந்து, உண்மை வெளிச்சத்துக்கு வரட்டும். இச்சம்பவத்தால் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படாது.

நாட்டின் முன்னாள் பிரதமர் தேவகவுடா, இந்த வயதில் வேதனை அனுபவிப்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us