சி.ஏ.ஏ., ரத்து செய்யப்படும் இ.கம்யூ., தேர்தல் அறிக்கை
சி.ஏ.ஏ., ரத்து செய்யப்படும் இ.கம்யூ., தேர்தல் அறிக்கை
ADDED : ஏப் 07, 2024 12:14 AM
புதுடில்லி: நாடு முழுதும் வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
இதையொட்டி, எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூ., தன் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்
எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டின் மீதான 50 சதவீத வரம்பு நீக்கப்படும்
ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்
கார்ப்பரேட் வரி அதிகரிக்கப்படும்
தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், தினசரி ஊதியம், 700 ரூபாயாக உயர்த்தப்படும்
இது போன்ற பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து, இந்திய கம்யூ., பொதுச்செயலர் டி.ராஜா கூறுகையில், ''மதச்சார்பற்ற ஜனநாயகத்தை காப்பாற்ற, ஆளும் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும்,'' என்றார்.

