ADDED : ஏப் 03, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : 'பெங்களூரு - சென்னை டபுள் டெக்கர் ரயில், மே 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2:40 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் ரயில், இரவு 8:35 மணிக்கு சென்னை சென்றடைந்து வந்தது.
இந்நிலையில், தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: பயணியர் வசதிக்காக, மே 1ம் தேதி முதல் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.ஆர்.,புரம், பங்கார்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, இரவு 7:45 மணிக்கு சென்றடையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

