முதல்வர் மாற்றம் தேவையற்றது: வசனானந்த சுவாமிகள் கருத்து
முதல்வர் மாற்றம் தேவையற்றது: வசனானந்த சுவாமிகள் கருத்து
ADDED : ஜூன் 30, 2024 11:53 PM

சித்ரதுர்கா: ''முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே ஒருங்கிணைப்பு உள்ளது. இந்த நேரத்தில், முதல்வர் மாற்றம் விவாதம் தேவையற்றது,'' என, ஹரிஹரா பஞ்சமசாலி மடத்தின் வசனானந்த சுவாமிகள்தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் பேசியதாவது: விராட் கோஹ்லி - ரோஹித் ஷர்மா சேர்ந்து விளையாடி, கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தனர்.
முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், கர்நாடகாவை பொறுத்த வரை, விராட் கோஹ்லி - ரோஹித் ஷர்மா ஜோடியை போன்று, ஒருங்கிணைந்து உள்ளனர்.
காங்கிரசில் சமூக நியாயம் உள்ளது. முதல்வர் மாற்றம் குறித்து பேசக்கூடாது என, சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
எனவே முதல்வர் மாற்றம் குறித்து விவாதிப்பது தேவையற்றது. முதல்வர் மாற்றம் குறித்து, ஆலோசிக்க வேண்டியது காங்கிரஸ் மேலிடம் தான். சோனியா, ராகுல், பிரியங்கா, சித்தராமையா, சிவகுமார் இடையிலான விஷயமாகும். சுவாமிகள் கூறியவுடன் முதல்வர் மாற்றம் நடந்து விடாது.
இப்போது, சித்தராமையா முதல்வராக இருக்கிறார். வரும் நாட்களில் சிவகுமாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு முன் லிங்காயத்து தலைவர்கள், முதல்வர் பதவி வகித்தனர். தலித்துகள் முதல்வராக வேண்டும் என, நாங்களும் கூறுகிறோம். பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.