ADDED : ஆக 24, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பழைய டில்லி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில், 22ம் தேதி மின்தடை ஏற்பட்டது. அப்போது, வென்டிலேட்டரில் இருந்த பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் அஷ்வனி குமாருக்கு, மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் நடந்தபோது மருத்துவமனையில் இருந்த 'பவர் பேக்கப்' வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மேயர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.