ADDED : மார் 10, 2025 11:25 PM

மூணாறு; இடுக்கி மாவட்டம் மூலமற்றம் அருகே வீரியமிக்க ' ஹைப்ரிட்' கஞ்சாவுடன் சினிமா 'மேக்கப் மேனை' கலால்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கலால்துறையினர் 'ஆப்ரேஷன் கிளீன் ஸ்டேட்' என்ற பெயரில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் மூலமற்றம் கலால்துறை இன்ஸ்பெக்டர் அபிலாஷ் தலைமையில் காஞ்சாறு- புள்ளிக்கானம் ரோட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் காரில் வந்த சினிமா ' மேக்கப் மேன்' ரஞ்ஜித் கோபிநாத்திடம் 37, இருந்து 45 கிராம் வீரியமிக்க ' ஹைப்ரிட்' கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். வாகமண் பகுதியில் நடக்கும் 'அட்டகாசம்' சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற இவர் கஞ்சாவுடன் சிக்கியுள்ளார்.