ADDED : செப் 17, 2024 08:08 PM
திரிலோக்புரி:விநாயகப் பெருமானின் சிலை கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
கிழக்கு டில்லியின் திரிலோக்புரி பகுதியில் திங்கள்கிழமை இரவு 10:00 மணியளவில், விநாயகப் பெருமானின் சிலையை கரைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பிளாக் 32 அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்குள் இரு பிரிவினரும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையை தொடர்ந்து சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிழக்கு காவல் துணை ஆணையர் அபூர்வ குப்தா தெரிவித்தார்.
தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திரிலோக்புரியில் பழைய போட்டி காரணமாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக டி.சி.பி., தெரிவித்தார்.

