சுத்தமான காற்று : முதலிடம் பிடித்தது குஜராத்தின் சூரத் நகர்
சுத்தமான காற்று : முதலிடம் பிடித்தது குஜராத்தின் சூரத் நகர்
ADDED : செப் 08, 2024 07:43 PM

புதுடில்லி : காற்றின் தர மேம்பாட்டில் குஜராத் மாநிலம் சூரத் நகர் இந்தியாவின் முன்னணி நகரமாக உருவெடுத்துள்ளது.
தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் படி, பயோமாஸ் மற்றும் நகராட்சி திடக்கழிவுகளை எரித்தல், சாலை தூசி, கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளின் தூசி, வாகன உமிழ்வு மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதன்படி காற்றின் தர மேம்பாட்டிற்காக இந்தியாவின் முன்னிணி நகரமாக சூரத் உருவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ம.பி., மாநிலத்தின் ஜபல்பூர், உ.பி., மாநிலத்தின் ஆக்ரா, ஆகியவை ஒரு மில்லியன் ( 10 லட்சம்) குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்ட மேற்கண்ட மூன்று நகரங்களும் ஸ்வச் வாயு சர்வேஷன் திட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
மேலும் 3 லட்சம் முதல் 10 லட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்டுள்ள உ.பி.,யின் பிரேசாபாத், மற்றும் ஜான்சி, மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய நகரங்கள் தூய்மை காற்றுகளை கொண்ட நகரங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களான உ.பி.,யின் ரேபரேலி, தெலங்கானாவின் நலகொண்டா, இமாச்சலின் நலகர், ஆகிய நகரங்களும் தூய்மை காற்றுகளை கொண்ட நகரங்களாக தேர்வு செய்யப்பட்டு அந்தந்த நகரங்களின் நகராட்சி ஆணையர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2017-18 -ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 51 நகரங்கள் PM 10 அளவை 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன. மேலும் 21 நகரங்கள் PM 10 அளவை40க்கு மேல் குறைந்துள்ளன.