ADDED : ஆக 08, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு கெங்கேரியில் மாநகராட்சியின், மின் மயானம் உள்ளது. கெங்கேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் இறந்தால், உடல்கள் இந்த மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
இந்நிலையில் தீ மூட்டும் மேடையில் பழுது நீக்குவது உட்பட, மின்மயானத்தில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இன்று முதல் 18ம் தேதி வரை, 10 நாட்கள் மின் மயானம் மூடப்பட உள்ளது. இங்கு உடல்களை தகனம் செய்ய வருவோர், சும்மனஹள்ளி, மேதி அக்ரஹாரா, பீன்யாவில் உள்ள மின்மயானங்களுக்கு செல்லும்படி, மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.
'18ம் தேதிக்கு பிறகு, கெங்கேரி மின்மயானம் வழக்கம் போல செயல்படும்' என்றும், மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.