ADDED : ஜூன் 01, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைக்கோ லே - அவுட், : பெங்களூரு, பன்னர்கட்டா சாலையில் 'வேகா சிட்டி மால்' உள்ளது. நேற்று மதியம் 3:00 மணிக்கு மாலின் நான்காவது மாடியில் இருந்து, வாலிபர் கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு போராடியவரை, மால் ஊழியர்கள், பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார்.
மைக்கோ லே - அவுட் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர், தனியார் கல்லுாரியில் பி.காம் படித்து வந்த, சுஹாஸ் அடிகா, 21 என்பது தெரிந்தது. அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவர் மட்டும் தனியாக வந்தாரா அல்லது அவருடன் வேறு யாரும் வந்தனரா என, கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

