ADDED : ஜூலை 25, 2024 10:54 PM
பெங்களூரு: பெங்களூரு தாசரஹள்ளி தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத். இப்போது காங்கிரசில் உள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
கடந்த 2019ல் காங்கிரஸ்- - ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழும் முன், முதல்வராக இருந்த குமாரசாமி தாசரஹள்ளி தொகுதிக்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ., எனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தியது.
எனது தொகுதி நிதியை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அவரது தொகுதிக்கு எடுத்துச் சென்று முறைகேடு செய்தார். இதுகுறித்து லோக் ஆயுக்தாவில் புகார் செய்வேன்.
இந்த விஷயத்தை முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தாசரஹள்ளி தொகுதிக்கு துணை முதல்வர் சிவகுமார் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு நிதியே ஒதுக்கவில்லை என்று, அசோக் பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர்கூறினார்.

