ADDED : மே 03, 2024 11:23 PM
ராய்ச்சூர் : 'ஜெய் ராம் என கோஷமிடுவோரை, போலீசார் பூட்ஸ் காலால் உதைக்க வேண்டும்' என, காங்கிரஸ் பிரமுகர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.,வினர் பொங்கி எழுந்து போராட்டம்நடத்துகின்றனர்.
ராய்ச்சூர் நகராட்சி கமிஷனர் அலுவலகம் முன், காங்கிரஸ் பிரமுகர் பஷிருதீன் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், 'ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவோரை, பூட்ஸ் காலால் போலீசார் உதைக்க வேண்டும்' என கூறினார். இவரது பேச்சு சமூக வலை
தளங்களில் பரவியது.
இதனால், பொங்கி எழுந்த பா.ஜ.,வினர், பஷிருதினை கண்டித்து போராட்டம் நடத்தினர். நகராட்சி கமிஷனர் குரு சித்தையா ஹிரேமத் முன்பு இதுபோன்று பேசியும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்தனர். சாலையின் மத்தியில் நின்று பெருங்குரலில் 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டு, தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் ராய்ச்சூர் சிந்தனுாரில் நேற்று கூறுகையில், ''பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவோரை, சுட்டு கொல்ல வேண்டும்.
''இதற்கான அதிகாரத்தை போலீசாருக்கு, மாநில அரசு வழங்க வேண்டும். யாராவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டால், தயங்காமல் சுட்டு கொல்ல வேண்டும்,'' என்றார்.