ADDED : ஏப் 25, 2024 05:34 AM

பாகல்கோட், : ''திப்புவை போன்று வாள் பிடித்து, தொப்பி அணிந்திருந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், மனம் போனபடி பேசுவதை நிறுத்தாவிட்டால், ஈஸ்வரப்பாவுக்கு ஏற்பட்ட கதியே இவருக்கு ஏற்படும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் பேசியதாவது:
சிறுபான்மையினரை வெறுக்கும் பசனகவுடா பாட்டீல் எத்னால், இதற்கு முன்பு ம.ஜ.த.,வில் இருந்தபோது, திப்பு சுல்தானை போன்று வாள் பிடித்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். இப்போது நாடு, தன் அப்பன் வீட்டு சொத்து போன்று பேசுகிறார்.
மலட்டு எருமைகளை போன்ற இவருக்கு, சமுதாயம், ஜாதி, கட்சி, கொள்கை பற்று இல்லை. பஞ்சமசாலி, சிறுபான்மையினர் என, யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என்கிறார். பஞ்சமசாலி சமுதாயத்தினருக்கு, எத்னால் எதையும் செய்யவில்லை.
மனம் போனபடி பேசுவதை, எத்னால் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.,வில், இவருக்கும் ஈஸ்வரப்பாவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

