ADDED : ஜூலை 05, 2024 06:30 AM

துமகூரு: ''காங்கிரஸ் அரசு செய்யும் ஊழல் தொடர்ந்து வெளிவரும்,'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுரபி கொடிகெரே கூறினார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில், புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த அரசின் ஊழல் தொடர்ந்து வெளிவரும். வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
'பட்ஜெட் பிரம்மா' என்று கூறப்படும், முதல்வர் சித்தராமையா ஊழல், பொய்களின் ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. மாநிலத்தை திவால் நிலைக்கு கொண்டு செல்கின்றனர். கர்நாடகாவை ஏ.டி.எம்., ஆக காங்கிரஸ் மேலிடம் மாற்றியுள்ளது. வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, அத்தியாவசிய பொருள்களின் விலைகளை உயர்த்தி, மக்களை கஷ்டத்தில் தள்ளி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.