'சித்தராமையாவை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கும் காங்., தலைவர்கள்'
'சித்தராமையாவை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கும் காங்., தலைவர்கள்'
ADDED : செப் 01, 2024 03:37 AM

ஹுப்பள்ளி : ''முதல்வர் சித்தராமையாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் காத்திருக்கின்றனர்,'' என, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
இதுகுறித்து, ஹுப்பள்ளியில் அவர் நேற்று கூறியதாவது:
மூடா விஷயத்தில் முறைகேடு செய்யவில்லை என்று முதல்வர் சித்தராமையா கூறுகிறார். அப்படி என்றால், விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? இதற்கு பதில் அளிக்காமல், கவர்னரை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள். கவர்னர், ஒரு தலித் தலைவர். அவருக்கு எதிராகவே காங்கிரசார் பேசுகின்றனர். முதல்வருக்கு, மானம், மரியாதை இல்லை.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று, முதல்வர் சித்தராமையா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் காத்திருக்கின்றனர்.
முதல்வருக்கும், அவரது பட்டாளத்துக்கும் அதிகாரம் தான் முக்கியம். ஊழல் செய்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. மூடா முறைகேடு ஆவணங்களை வழங்கியதே காங்., தலைவர்கள் தான்.
இவ்வாறு அவர்கூறினார்.