தேர்தல் நேரத்தில் 4 அமைச்சர்களை சிறையில் அடைக்க சதி: ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
தேர்தல் நேரத்தில் 4 அமைச்சர்களை சிறையில் அடைக்க சதி: ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 02, 2024 11:18 AM

புதுடில்லி: 'தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது' என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அதிஷி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: என்னை பா.ஜ.,வில் இணையும் படி தூது அனுப்பினர். பா.ஜ.,வின் மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தேர்தல் நேரத்தில் சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா உள்ளிட்ட 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பா.ஜ.,வில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை.
ஒற்றுமை
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க பா.ஜ.,வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.-

