ADDED : ஜூலை 21, 2024 07:32 AM

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதா குவி மாடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் காதர் ஆய்வு செய்தார்.
பெங்களூரு அம்பேத்கர் வீதியில், கர்நாடக அரசின் அதிகார மையமாக விதான் சவுதா அமைந்துள்ளது.
இங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், மேலவை தலைவர், அரசு அதிகாரிகளின் அலுவலக அறைகள் உள்ளன. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
விதான் சவுதாவின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே வரும் பகுதியில் உள்ள குவிமாடத்தில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்வதால் அந்த விரிசல் வழியாக தண்ணீர் சொட்டுகிறது. விரிசல் பகுதியை சபாநாயகர் காதர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ''இந்த இடம், எங்கள் வரம்புக்குள் வராது. பொதுப்பணி துறையின் கீழ் வருகிறது. ஆனாலும் குவி மாடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது பற்றி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். விதான் சவுதா பழைய கட்டடம் என்பதால் சில விரிசல்கள் இருக்கலாம். விரிசல்களை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம்,'' என்றார்.