நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏட்டுதற்கொலை
ஹூப்பள்ளியில் வசித்த நாகராஜ் ஹஞ்சினமனி, 48, ஹூப்பள்ளி நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், ஏட்டாக பணியாற்றினார். இவர் நேற்று மதியம், உனகல் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை.
விபத்தில் வாலிபர் சாவு
பெங்களூரு புறநகர், நெலமங்களாவின், டி.பேகூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை - 4ல், நேற்று மதியம் சென்ற பைக் மீது, லாரி மோதியது. பைக்கில் பயணித்த ஜேம்ஸ், 23, உயிரிழந்தார். சைத்ரா, 23, காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.