ஆட்டோ டிரைவர் கொலை
பெங்களூரு எலஹங்கா அருகே அனந்தபுராவில் வசித்தவர் சுப்பிரமணி, 23. ஆட்டோ டிரைவர். இவரது நண்பர்கள் கணேஷ், 23, முரளிதர், 24. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாடிய போது, நண்பர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியை கத்தியால் குத்தி நண்பர்கள் இருவரும் கொலை செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா பிரச்னையில் கொலை
பெங்களூரு ஹொஸ்கோட் கட்டிகனஹள்ளியில் வசித்தவர் மோஹின், 26. கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர். தனது நண்பர் ரோஷனிடம் கஞ்சா வாங்க 500 ரூபாய் கொடுத்தார். ஆனால் அவர் கஞ்சா வாங்கி தரவில்லை; பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மோஹினை கத்தியால் குத்தி ரோஷன் கொலை செய்தார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர்.
======
பெண் தற்கொலை
பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் வசிப்பவர் ஸ்ரீ காந்த். இவரது மனைவி நந்தினி, 32. மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கைரேகை பதிவு பிரிவில் ஊழியராக வேலை செய்தார். இவருக்கு யாரோ ஒருவர், கடந்த சில தினங்களாக மெசேஜ் அனுப்பி வந்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த நந்தினி நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
========
மாணவி பலாத்காரம்
பெங்களூரு ஹெச்.ஏ.எல்., பகுதியில் வசிக்கும் தம்பதியின் 14 வயது மகள், தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை நேற்று வெளியே அழைத்து சென்றார். காட்டு பகுதிக்குள் அழைத்து சென்றார். திருமணம் செய்வதாக கூறி மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார்.
=======
தொழிலாளி பலி
ராய்ச்சூர் சிந்தனுாரை சேர்ந்தவர் நாகராஜ், 22. பெங்களூரு கங்கமனகுடியில் தங்கி இருந்து, கட்டட தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றார். அவரை தெருநாய் துரத்தியது. நாயிடம் இருந்து தப்பிக்க ஓடினார். எதிர்பாராவிதமாக சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார்.
========
குழந்தையை விற்ற 5 பேர் கைது
ராம்நகர் மாகடியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. காதலன் நந்தாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை, கடந்த 20 ம் தேதி குனிகல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு காதலன் அனுமதித்தார். மறுநாள் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை நந்தா, தனது உறவினரான ஆஷா ஊழியர் ஜோதி உதவியுடன், முபாரக் என்பவருக்கு 60,000 க்கு விற்றார். குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரில், குழந்தையின் தாய், தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.