ADDED : மார் 04, 2025 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவேக் நகர்: தலித் அமைப்பினர் அலுவலகம் முன் அறிவிப்பின்றி இடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சாந்திநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட விவேக் நகரில் உள்ள 115வது வார்டில் பி.ஆர்.அம்பேத்கரின் டி.எஸ்.எஸ்., தலித் அமைப்பின் அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த அலுவலகத்தை கடந்த மாதம் 22ம் தேதி அதிகாலையில், மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் சிலர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஜே.சி.பி.,யால் இடித்து தரைமட்டம் ஆக்கினர். தேசிய தலைவர்களின் படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது, அதிகாரிகள் அடையாள அட்டை இல்லாமல் வந்தனர் என்றும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தலித் அமைப்பினர் தெரிவித்தனர்.