தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராம்நகர் காங்கிரசில் இருந்த தலித்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

ராம்நகர் காங்கிரசில் இருந்த தலித்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்

ராம்நகர் காங்கிரசில் இருந்த தலித்கள் ம.ஜ.த.,வில் ஐக்கியம்


ADDED : ஏப் 23, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்நகர் : காங்கிரசில் இருந்து பெரும்பாலான தலித் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்தனர்.

ராம்நகர் ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று காங்கிரசை சேர்ந்த தலித் தலைவர்கள், தலித் சங்க நிர்வாகிகள் உட்பட பல்வேறு சங்கத்தினர் ம.ஜ.த.,வில் இணைந்தனர்.

இது தொடர்பாக, தலித் சங்க தலைவர் அஞ்சனபுரா வாசு கூறியதாவது:

தலித் அமைப்புகள் காங்கிரசுக்கு என்றுமே ஆதரவாக இருந்தது இல்லை. ஆனால், அவர்களாகவே காங்கிரஸ் என்றால் தலித், தலித் என்றால் காங்கிரஸ் என கூறி வருகின்றனர். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற, இரவு, பகலாக பணியாற்றுவோம். ராம்நகரில் இருந்து காங்கிரசை வெளியேற்றும் பணி துவங்கும்.

ஓட்டு வங்கிக்காக மட்டுமே எங்களை பயன்படுத்தி கொள்ளும் காங்கிரஸ், எங்கள் சமுதாய மக்களுக்கு என்ன பங்களிப்பு அளித்து உள்ளனர்.

தற்போது தலித்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர், புத்திசாலியாக உள்ளனர். எனவே யாரும் காங்கிரசுடன் இருக்க மாட்டார்கள். அனைத்து தலித் சங்கங்களையும் தொடர்பு கொண்டு, ம.ஜ.த., - பா.ஜ.,வில் இணைய வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us