sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த இடம் கோகர்ணா

ADDED : ஆக 13, 2024 07:29 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:29 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாபலேஸ்வரா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தென் மாநிலங்களின் முக்கியமான புனித தலங்களில் ஒன்றான இக்கோவிலில் சிவபெருமானை ஆத்மலிங்கம் அல்லது பிராணலிங்கம் என்று அழைக்கின்றனர். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்த படியாக கருதப்படும் இக்கோவில், 'தட்சிண காசி' என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், ஏழு புனித முக்தி ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவிலில், ஹிந்துக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.

வரலாறு

புராணங்கள்படி, சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தை கைப்பற்றுவதற்காக, சிவபெருமானை வேண்டி ராவணன் தவம் செய்தார்.

இந்த தவத்தால் மகிழ்ந்த சிவன், அவருக்கு ஆத்மலிங்கத்தை கொடுத்தார். 'இந்த லிங்கத்தை தரையில் வைக்காமல் கொண்டு செல்ல வேண்டும். தரையில் பட்டால், அங்கேயே நிலைத்து விடும்' என சிவன் கூறினார்.

இதனால், லிங்கத்தை கவனமாக கையில் பிடித்தபடி, இலங்கைக்கு ராவணன் சென்று கொண்டிருந்தார்.

கோகர்ணா பகுதியில் செல்லும் போது, பிரார்த்தனை செய்ய நினைத்தார்.

ஆத்மலிங்கத்தை, ராவணன் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த தேவர்கள், விநாயகரிடம் வேண்டினர். அவரும் சிறுவன் வேடம் போட்டு, ராவணன் அருகில் சென்றார்.

விநாயகரின் சாதுர்யம்

ராவணன், 'இந்த சிலையை கையில் வைத்திரு; கீழே வைக்க வேண்டாம், நான் நீராடி விட்டு வருகிறேன்' என்று கூறினார். இதை எதிர்பார்த்த விநாயக பெருமானும், ஆத்மலிங்கத்தை கையில் வாங்கிக் கொண்டார்.

ராவணன் நீராடி கொண்டிருந்த போது, ஆத்மலிங்கத்தை விநாயகர் கீழே வைத்து விட்டு சென்று விட்டார். இதை பார்த்த ராவணன், தனது முழு பலத்தை பிரயோகித்தும், ஆத்மலிங்கத்தை அசைக்க முடியவில்லை.

கோபமடைந்த ராவணன், லிங்கத்தை உடைத்தார். இதன் பாகங்கள் கர்நாடகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழுந்தது. அதில் ஒன்று தான் மஹாபலேஸ்வரா கோவிலாக உருப்பெற்றுள்ளது.

இந்த கோவில், திராவிட பாணியில், வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. 6 அடி உயரமுள்ள சிவலிங்கம், சதுரமான சாலிகிராம பீடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில், நின்ற நிலையில் சிவன் அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் விநாயகர், சண்டிகேஸ்வரர், ஆதி கோகர்ணேஸ்வரர், தத்தாத்ரேயர் ஆகியோரின் சன்னிதிகளும் உள்ளன. கருவறைக்கு பின்புறம் தாமரை கவுரி சன்னிதியும் உள்ளது. இத்தலத்தின் மிகவும் புனிதமான தீர்த்தம் கோடி தீர்த்தமாகும்.

இக்கோவிலின் சிறப்பு, பக்தர்களே கருவறைக்குள் சென்று, ஆத்மலிங்கத்தை தொட்டு பால் அபிஷேகம் செய்யலாம். கோவிலுக்கு செல்லும் முன், அரபிக்கடலில் புனித நீராடுவர்.

இங்கு மஹா சிவராத்திரி முக்கிய திருவிழாவாகும். ஆத்மலிங்கத்தை தரிசிக்க, தென் மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

13_Article_0001, 13_Article_0002, 13_Article_0003

செல்வது?

விமான சேவை இல்லாததால், பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், கோகர்ணா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் செல்லலாம். பஸ்சில் செல்வோர், கோகர்ணா பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

மஹாபலேஸ்வரா கோவில் முகப்பு. (அடுத்த படம்) திருவிழா நாட்களில் பவனி வரும் தேர். (கடைசி படம்) புனித கோடி தீர்த்த குளம்.

மஹாபலேஸ்வரா கோவில் முகப்பு. � திருவிழா நாட்களில் பவனி வரும் தேர்.

செல்வது?

விமான சேவை இல்லாததால், பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், கோகர்ணா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் செல்லலாம். பஸ்சில் செல்வோர், கோகர்ணா பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

செல்வது?

விமான சேவை இல்லாததால், பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், கோகர்ணா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் செல்லலாம். பஸ்சில் செல்வோர், கோகர்ணா பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

- நமது நிருபர் -

      Dinamalar
      Follow us