ADDED : ஏப் 19, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா நகரில் நேற்று குமாரசாமி கூறியதாவது:
ஜனநாயக நடைமுறையில், யார், யாருக்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். அவர்களின் கடமையை அவர்கள் செய்கின்றனர். மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகர் தர்ஷன் பிரசாரம் செய்வதில் தவறு இல்லை.
சிவகுமார் மீது, முன்னாள் பிரதமர் தேவகவுடா சுமத்திய குற்றச்சாட்டு, 30 ஆண்டுகள் முந்தைய கதையாகும். இது தொடர்பான ஆவணங்கள் உள்ளதாக, தேவகவுடா கூறியுள்ளார். மாநிலத்தின் 28 தொகுதிகளிலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். பா.ஜ.,வின் அதிருப்தியை, அந்த கட்சி மேலிடம் சரி செய்யும். கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர். ஷிவமொகாவில் ராகவேந்திரா, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

