sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறையில் தர்ஷன்: கன்னட திரைப்பட துறைக்கு சறுக்கல்

/

சிறையில் தர்ஷன்: கன்னட திரைப்பட துறைக்கு சறுக்கல்

சிறையில் தர்ஷன்: கன்னட திரைப்பட துறைக்கு சறுக்கல்

சிறையில் தர்ஷன்: கன்னட திரைப்பட துறைக்கு சறுக்கல்


ADDED : ஜூன் 24, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : 'கொலை வழக்கில்நடிகர் தர்ஷன் கைதாகி இருப்பதன் மூலம், கன்னட திரைத்துறைக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது' என்று சினிமா வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர் தர்ஷன், 47. ரசிகர்களால் அன்பாக 'டி பாஸ்' என்று அழைக்கப்படுகிறார். ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கன்னட சினிமா துறைக்கு பலத்த அடி விழும் என சினிமா வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ரசிகர் பட்டாளம்


மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், அம்பரிஷ், விஷ்ணுவர்த்தன் ஆகியோருக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் நடித்த திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலாக ஓடிவிடும். இதனால் 'பாக்ஸ் ஆபீஸு'க்கு நல்ல வருவாய் கிடைத்தது.

தற்போது நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், யஷ், துனியா விஜய், சுதீப், ரக் ஷித் ஷெட்டி, ரிஷப் ஷெட்டி, டாலி தனஞ்ஜெய் போன்றோர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்களாக உள்ளனர்.

இவர்களின் திரைப்படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் இல்லாவிட்டாலும் அவரது படங்கள் வெளிவந்தாலும் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது.

கே.ஜி.எப்.,


இந்நிலையில் தற்போது ஓ.டி.டி.,யில் திரைப்படங்கள் வெளியாவதால், வீட்டில் இருந்தபடியே ரசிகர்கள் திரைப்படங்கள் பார்க்கின்றனர். இதனால் முன்பு போல 'பாக்ஸ்' ஆபீஸ்களுக்கு வருவாய் இல்லை. இதன் காரணமாக கன்னட திரைத்துறை நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

கடந்த 2018ல் வெளியான கே.ஜி.எப்., - 1 திரைப்படம் கன்னட திரைத்துறைக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது. கர்நாடகாவில் மட்டும், இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தது. கன்னட திரை உலகில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் இது என்று சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து கே.ஜி.எப்., படத்தின் இரண்டாவது பாகமும், கன்னட திரைத்துறைக்கு நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், தர்ஷன் நடிப்பில் வெளியான காட்டேரா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கர்நாடகாவில் மட்டும் இந்தப் படம் 67 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தது.

இதற்கு முன்பு, தர்ஷன் நடித்த சில படங்கள் பிளாப் ஆகின. காட்டேரா வெற்றியின் மூலம் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதன் பின்னர், டெவில் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம், டிசம்பரில் வெளியாக இருந்தது.

படத்தின் இறுதி கட்ட பணிகளும் வேகமாக நடந்து வந்தன. ஆனால் தர்ஷன் கொலை வழக்கில் சிறையில் உள்ளதால், டெவில் திரைப்படம் வெளியாகுமா என்று தெரியவில்லை.

காட்டேரா திரைப்படம் வெற்றி பெற்ற பின்னர், மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவும் தர்ஷனை ஒப்பந்தம் செய்ய, தயாரிப்பாளர்கள் ரெடியாகிவந்தனர். ஆனால்தற்போது அவர் சிறையில் இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

'தர்ஷன் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் வைத்து, கதைகளை தயாரித்து வைத்துள்ளோம். தர்ஷன் சிறையிலிருந்து கூடிய விரைவில் வெளியே வருவார்.

அவர் வந்த பின்னர், ஷூட்டிங்கை துவங்குவோம்' என்று, தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். ஆனால் தர்ஷன் சிறையிலிருந்து எப்போது வெளியே வருவார் என்பது தெரியவில்லை.

தடை விதிக்கப்படுமா?


ஒருவேளை இனிமேல் தர்ஷன் படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்றால், கன்னட சினிமா துறைக்கு தான் பெரிய அடியாக இருக்கும். கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருப்பதால், டெவில் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என, பா.ஜ., தலைவர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

தர்ஷன் கைதானதும், 'அவரது திரைப்படங்களை வெளியிட தடை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் கூறியிருந்தனர்.

ஆனால் தர்ஷன் படத்தை வெளியிடாமல் தடுத்தால் அது தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று உணர்ந்துள்ளனர். இதனால், தர்ஷன் திரைப்பட விஷயத்தில் முடிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

புறக்கணிக்க அழைப்பு

தர்ஷன் நடித்துள்ள டெவில் திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கைதாகி இருப்பதால் திரைப்படம் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் டெவில் திரைப்படம் வெளியாகும் வரை, வேறு எந்த கன்னட திரைப்படங்களையும் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டாலும் அந்த திரைப்படங்களை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று, தர்ஷனின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைக்க துவங்கி உள்ளனர்.

சேர்க்கை சரியில்லை

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கணேஷ் பப்பன்னா கூறுகையில், ''ஒரு காலத்தில் தர்ஷனின் நண்பர்கள் வட்டாரத்தில், நான் அடையாளம் காணப்பட்டேன். அப்போதெல்லாம் அவர் மிகவும் நல்லவராக இருந்தார்.

''கொரோனாவுக்கு பின்னர் தர்ஷனின் சேர்க்கை சரியில்லை. இதனால் நான் உட்பட சிலர் அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து வெளியே வந்தோம். அவருடன் இருந்தவர்களால், தற்போது தர்ஷன் சிறையில் உள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருப்பது, கன்னட திரைத்துறைக்கு கரும்புள்ளி,'' என்றார்

பரப்பன அக்ரஹாரா படம்?

நடிகர் தர்ஷன் மெஜஸ்டிக், கலாசி பாளையா ஆகிய திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். தற்போது கொலை வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால், பரப்பன அக்ரஹாரா என்ற பெயரில் திரைப்படத்தில் நடிப்பாரா என்று, தர்ஷனின் எதிர்ப்பாளர்கள், சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்க ஆரம்பித்துஉள்ளனர்.

புனித் ரசிகர்களுக்கு தொல்லை

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கும், தர்ஷனுக்கும் ஆகவே ஆகாது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் உமாபதி கவுடா கூறுகையில், ''நடிகர் தர்ஷனும், அவரது ரசிகர்களும், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், அவரது ரசிகர்களுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தனர்.

''எனது தயாரிப்பில் ராபர்ட் திரைப்படத்தில் தர்ஷன் நடித்தார். அதன் பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, தர்ஷனும், அவரது ஆதரவாளர்களும் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். தர்ஷனின் ரசிகர்கள் எப்போதும் அமைதியாகவே நடந்து கொண்டதில்லை,'' என்றார்.

தர்ஷனுக்காக ரூ.139 செலவு

நடிகர் தர்ஷன் சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். முதல் படமான மகாபாரதா படத்தில் நடிக்கும் போது, மூத்த திரைப்பட தயாரிப்பாளர் மாண்டியா ரமேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த திரைப்படத்தில் நடித்த போது தர்ஷன் கீழே விழுந்ததில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. திரைத்துறையினர் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வராத போது, மாண்டியா ரமேஷ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். இதற்காக 139 ரூபாய் செலவும் செய்துள்ளார்.

தற்போது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ள மாண்டியா ரமேஷ், 'தர்ஷன் தான் வந்த வழியை திரும்பி பார்த்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர்கள் அகற்றம்

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இன்னும் குறையவில்லை. தர்ஷனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். ஆனால் தர்ஷனின் செயலால் ஒரு சில ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பல ரசிகர்கள் 'டி பாஸ்' என, தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தனர். அந்த ஸ்டிக்கர்களை, சில ரசிகர்கள் அகற்றி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us