ADDED : பிப் 21, 2025 10:01 PM
ஏமாற்றும் வேலை!
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து பா.ஜ., தலைவர்களும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், டில்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டில்லி மக்களை ஏமாற்றும் வேலையை முதல் நாளில் இருந்தே பா.ஜ., அரசு துவங்கிவிட்டது.
ஆதிஷி,
முன்னாள் முதல்வர்
ஆம் ஆத்மி
முதல் நாளில் பரிசு!
பதவியேற்ற உடனேயே, முதல் நாளில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினோம். முதல் நாளிலேயே டில்லி மக்களுக்கு 10 லட்ச ரூபாய் நன்மை கிடைக்கச் செய்துள்ளோம். எங்களை கேள்வி கேட்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் இப்போது டில்லியைப் பற்றி கவலைப்படுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டில்லி மக்கள், தங்கள் உரிமைகளைப் பெறுவர். தங்கள் சொந்தக் கட்சியை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ரேகா குப்தா
முதல்வர்