ADDED : மே 20, 2024 09:17 PM

மாண்டியா: ''பென் டிரைவ் வழக்கில், கைது செய்யப்பட்டு எஸ்.ஐ.டி., கஸ்டடியில் உள்ள பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜேகவுடா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது,'' என ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ்கவுடா குற்றம் சாட்டினார்.
மாண்டியா நாகமங்களாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஆபாச பென் டிரைவ் வழக்கில், தேவராஜே கவுடாவை கைது செய்து, எஸ்.ஐ.டி., கஸ்டடியில் வைத்துள்ளது. இவரை பல மாதங்கள் கஸ்டடியில் வைத்திருக்க, சதி நடக்கிறது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. இது 100 க்கு 100 சதவீதம் உண்மை.
பென்டிரைவ் வழக்கில், அமைச்சர்களே வில்லன்கள். இவர்கள் பயங்கரவாதிகள் போன்று நடந்து கொள்கின்றனர். பென்டிரைவ் வழக்கின் சூத்திரதாரிகளுக்கு, அரசு ராஜ உபச்சாரம் செய்கிறது. இதுவரை அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்காமல், கைது செய்யாமல் விளையாடுகின்றனர். காங்கிரஸ் அரசிடம் உண்மைத்தன்மை இல்லை. அடிப்படை என்ன என்பதை தேடி கண்டுபிடிக்க, விசாரணையும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

