UPDATED : டிச 11, 2025 10:24 PM
ADDED : டிச 11, 2025 09:14 PM

முல்லன்புர்: 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு 214 ரன்னை தென் ஆப்ரிக்கா அணி இலக்கு நிர்ணயித்தது. இதன் பிறகு களமிறங்கியுள்ள இந்திய அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று பஞ்சாப்பின் முல்லன்புரில் (புதிய சண்டிகர்) நடக்கிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டிகாக்கும், ஹென்ட்ரிக்ஸ் இறங்கினர். இதில் ஹெ ன்ட்ரிக்ஸ் 8 ரன்னில் வருண் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஆடிய குயின்டன் டிகாக், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளாக விளாசி 90 ரன் சேர்த்து ரன் அவுட் ஆனார்.பிரேவிஸ் 14,எய்டன் மார்க்ரம் 29 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பெரேரா ஆட்டமிழக்காமல் 30 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் எடுத்தனர். வருண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் குவித்தது.இதனையடுத்து தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் நிகிடி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்த வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். சிறிது நேரம் தாக்குபிடித்த அக்ஷர் படேல் 21 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
மற்றொரு ஆட்டக்காரர் அபிஷே க் சர்மா 17 ரன்களுக்கு ஜேன்சன் பந்தில் அவுட் ஆனார்.ஹர்திக் பாண்டியா 20 ரன்களுக்கு சிபம்லா பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா 53 ரன்களுடன் ஜிதேஸ் சர்மா 18 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.இந்திய அணி, 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

