ADDED : ஆக 10, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேத்தமங்களா: பேத்தமங்களா கிராமிய வித்யா சம்ஸ்தே அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 155 பேருக்கு சீருடை, தென்னங்கன்றுகளை பேத்தமங்களா ரோட்டரி சங்கம் மண்டல கவர்னர் லட்சுமி நாராயணா வழங்கினார்.
அவர் பேசுகையில், ''இந்த தென்னங்கன்றை மாணவர்கள், மிகுந்த அக்கறையுடன் வளர்க்க வேண்டும். உங்கள் அறிவும் வளர வேண்டும்; தென்னங்கன்றும் வளர வேண்டும். இந்த இரண்டுமே உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். அடுத்த ஆண்டு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் கூட ரோட்டரி சங்கம் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.
ஆசிரியர்கள், ரோட்டரி சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்.

