என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...! ஹோட்டலில் சாப்பிடுவோர் 32 சதவீதம் அதிகரிப்பு!
என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...! ஹோட்டலில் சாப்பிடுவோர் 32 சதவீதம் அதிகரிப்பு!
ADDED : செப் 14, 2024 04:32 PM

புதுடில்லி: டில்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர் எண்ணிக்கை, 2024ல் 32 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் என்ன உண வகை சாப்பிடுகிறார்கள் என்பது பற்றி ஸ்விக்கி மற்றும் பெயின் அண்டு கம்பெனி சார்பில் ஆய்வு நடத்தினர். அந்த அறிக்கையில் டில்லிவாசிகள் அதிகாலையில் தோசையைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்; வெகு சிலரே இட்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
இது குறித்து டில்லியில் ஹோட்டல் நடத்தி வருபவர் கூறியதாவது: எங்களுக்கு டில்லியில் எங்களுக்கு பல கிளைகள் உள்ளன. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பார்த்தால் வாடிக்கையாளர்கள் வருகை 50 சதவீதம் இருக்கும். பெரும்பாலும் எளிதில் ஜீரணிக்கின்ற உணவையே விரும்பி சாப்பிடுவார்கள். தோசை, இட்லி அடுத்து பூரி வகைகள் மற்றும் சப்பாத்தியை விரும்புகிறார்கள்.இவ்வாறு தெரிவித்தார்.இந்திய உணவு சேவைத்துறையின் 2024ம் ஆண்டு ஆய்வின்படி டில்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.