வீட்டுல காய்கறி இல்லையா... கவலையில்லை ஈசியா செய்யலாம்... வெங்காய மசாலா குழம்பு
வீட்டுல காய்கறி இல்லையா... கவலையில்லை ஈசியா செய்யலாம்... வெங்காய மசாலா குழம்பு
ADDED : செப் 07, 2024 07:30 AM

என்ன தான் நாகரிகம் வளர்ந்து பீட்சா, பர்கர் என்று மக்கள் சாப்பிட்டாலும், சோறு சாப்பிடுவதற்கு ஈடாக எதுவும் வராது. அப்பாடா... சோறு சாப்பிட்ட மாதிரி இல்லப்பா... என்று சொல்வதை நாம் பார்த்து இருப்போம்; கேட்டிருப்போம்.
சோற்றுக்கு பெரும்பாலும் சாம்பார், புளிக்குழம்பை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இந்த இரண்டு குழம்புகளை வைக்க கண்டிப்பாக காய்கறிகள் தேவை. ஆனால் வீட்டுல காய்கறி இல்லாமல், ஈசியா வைக்கும் குழம்பாக வெங்காய மசாலா குழம்பு உள்ளது. இதற்கான செய்முறையை பார்க்கலாம்.
முதலில் மசாலா தயார் செய்ய வேண்டும். கேஸ் அடுப்பை குறைந்த வெப்பத்தில் வைத்து கொத்தமல்லி, மிளகு, வெந்தயம், சீரகம் போட்டு வதக்க வேண்டும். அனைத்தையும் மிக்சியில் அரைத்து புளி கரைத்து சேர்க்க வேண்டும்.
அரைத்த அனைத்தையும் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் போட்டு, வெங்காய துண்டுகள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்கள். பின், ஒரு பாத்திரத்தை வைத்து மூடி வைத்து விடுங்கள். கால் மணி நேரம் கொதித்த பின், மூடியை திறந்து பார்த்தால் சூடான, சுவையான வெங்காய மசாலா குழம்பு ரெடி. இந்த குழம்பை சோற்றுக்கு மட்டும் இல்லை; சப்பாத்தி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
வீட்டுல காய்கறி இல்லன்னு கவலைப்படாதீங்க இல்லத்தரசிகளே... வெங்காய மசாலா குழம்பு செய்து, குடும்பத்தினரை அசத்துங்க.
தேவையான பொருட்கள்
l நான்கு பெரிய வெங்காயம்
l அரை கப் தேங்காய் துருவல்
l மஞ்சள் துாள் அரை டீஸ்பூன்
l பத்து பல் பூண்டு
l மிளகாய் துாள் ஒரு டீஸ்பூன்
l உப்பு தேவையான அளவு
l கடுகு அரை டீஸ்பூன்
l கறிவேப்பிலை சிறிதளவு
l சீரகம் அரை டீஸ்பூன்
l நான்கு மிளகு
l பெருங்காயம் கால் டீஸ்பூன்
. - நமது நிருபர் -