மேற்கு வங்க பெண்களை இழிவுபடுத்த வேண்டாம்: மம்தா எச்சரிக்கை
மேற்கு வங்க பெண்களை இழிவுபடுத்த வேண்டாம்: மம்தா எச்சரிக்கை
ADDED : மே 05, 2024 05:40 PM

கோல்கட்டா: ''மேற்கு வங்க மாநில பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் என பா.ஜ.,வை எச்சரிக்கிறேன்'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சந்தேஷ்காலி சம்பவத்தை திட்டமிட்டு நடத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது என்று நான் நீண்ட காலமாக கூறி வந்தேன். அதன்படி, சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்ற தலைப்பில் நான் வெளியிட்ட வீடியோ அங்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
இழிவு செய்யாதீர்கள்!
மேற்கு வங்க மாநில பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் என பா.ஜ.,வை எச்சரிக்கிறேன். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடப்பதாக பொய் பேசுவதற்காக சிலருக்கு பா.ஜ., பணம் கொடுத்து உள்ளது. ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழந்தால், பணத்தால் அதை மீட்க முடியாது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் மக்கள் பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.