விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்
விரைவில் இரட்டை இயந்திர ஆட்சி: பா.ஜ., - எம்.எல்.ஏ., திட்டவட்டம்
ADDED : ஏப் 14, 2024 07:10 AM

பெலகாவி: ''தேர்தல் முடிந்ததும் கிரஹ ஜோதி, சக்தி, கிரஹ லட்சுமி திட்டம் நிறுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும். விரைவில் மாநிலத்தில் இரட்டை இயந்திர ஆட்சி வரும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவி ஹிண்டல்கா கிராமத்தில் நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிஹோளி பேசியதாவது:
பெலகாவியில் காங்கிரஸ் தோற்பது உறுதி. இத்தொகுதியில் 2.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெறுவார். மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஐரோத்ரி முதல் பெலகாவி வரையிலான நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வாக்குறுதியை நம்பி, மோசமான ஆட்சியை கொண்டு வந்தீர்கள். இத்தேர்தலிலும் காங்கிரஸ் அரசின் பொய்யான வாக்குறுதிக்கு பலியாகாதீர்கள். தேர்தல் முடிந்ததும் கிரஹ ஜோதி, சக்தி, கிரஹ லட்சுமி திட்டம் நிறுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும். விரைவில் மாநிலத்தில் இரட்டை இயந்திர ஆட்சி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லட்சுமி ஹெப்பால்கர் குறித்து, ஒரு வார்த்தை கூட ரமேஷ் ஜார்கிஹோளி பேசவில்லை. மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதையே திரும்ப திரும்ப கூறினார்.

