UPDATED : ஏப் 19, 2024 05:37 AM
ADDED : ஏப் 18, 2024 01:02 PM

தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்.19 ) லோக்சபா தேர்தலுக்கு உரிய ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.
அரசு ஊழியர்கள், போலீசார் தங்களின் பணிகளை துவக்கி உள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்த படத்தொகுப்பு;

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு பணிக்கு செல்லும் அலுவலர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்களது ஆர்டர் காப்பியை வாங்குவதற்காக மர நிழலில் வரிசையாக காத்திருக்கின்றனர்.இடம்; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பூத்திற்கு அனுப்பப்பட வேண்டிய இ வி எம் மற்றும் பொருட்கள் லாரியில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. இதை தேர்தல் நடத்தும் அதிகாரியான குணசேகரன் பார்வையிட்டார்.

லோக் சபா தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த ராணுவ வீரர்கள் வெயிலில் இருந்து தப்பிக்க ஐஸ் சாப்பிடும் காட்சி. இடம்: கோவை, பி.ஆர். எஸ்., மைதானம்.

அசாம் மாநிலம்

